அழகு
![]() |
போலியான புன்னகைகளை காட்டிலும்
நிர்வாணமான கோபங்கள் அழகு.
போலியான புகழ்ச்சிகளை காட்டிலும்
நிர்வாணமான விமர்சனங்கள் அழகு.
போலியான நட்புக்களைக் காட்டிலும்
நிர்வாணமான ஏகாந்தம் அழகு.
போலியான கோசங்களைக் காட்டிலும்
நிர்வாணமான அமைதி அழகு.
போலியான அன்பைக் காட்டிலும்
நிர்வாணமான தனிமை அழகு.
போலியான கற்பனைகளைக் காட்டிலும்
நிர்வாணமான உண்மைகள் அழகு.
போலியான சத்தியங்களைக் காட்டிலும்
நிர்வாணமான நிராகரிப்புக்கள் அழகு.
போலிகள்
தற்காலிக அழகுடைய நிரந்தர வலிகள்.
நிர்வாணங்கள்
தற்காலிக வலியுடைய நிரந்தர சுகங்கள்.
....xxx....
தீபிகா
19-05-2013
06.47P.P.m
4 comments:
arumai arumai
vaazhththukkaL
அழகோ அழகு ! பாராட்டுக்கள்.
அழகு... அருமை... வாழ்த்துக்கள்...
சரியே...வாழ்த்துக்கள்
Post a Comment