More than a Blog Aggregator

Feb 28, 2012

போர்க்களத்துக் குதிரைகள்



குண்டுபட்டு விழுந்த வீரர்களின்
போர்க்களக் குதிரைகள்
சுமப்பதற்கு யாருமற்று
அங்குமிங்கும் அமைதியாய் அலைகின்றன.


எல்லோருக்காகவும் ஓடித்திரிந்த
அவற்றின் கால்கள்
நடக்கமுடியாத கனதியோடு
புல்வெளியற்ற சாம்பல் மேடுகளுக்குள்
ஆழப் புதைகின்றன.

குதிரைகளால் பேசமுடியாதிருக்கிற
வலிமிகுந்த வார்த்தைகளுக்கு
யாராலும் களிம்பு தடவ முடியாதிருக்கிறது.

கண்களினோரங்களில் கண்ணீர் வழிந்திருக்கிற
அவற்றின் வயிறுகள்
தண்ணீருக்காக எல்லோர் முகங்களையும்
மேய்கின்றன.

தண்ணீர் வைக்க மறுக்கிறவர்களுக்கும்
தண்ணீர் வைக்க அச்சப்படுகிறவர்களுக்குமிடையே
வீரர்களை தொலைத்த குதிரைகள்
நுரைதள்ளிய வாயுடன் விழிகள் திறந்தபடி
மெல்ல மெல்ல மூச்சடங்குகின்றன.



---xxx----



தீபிகா
26.01.2012
9.55 a.m




11 comments:

Yaathoramani.blogspot.com said...

தண்ணீர் வைக்க மறுக்கிறவர்களுக்கும்
தண்ணீர் வைக்க அச்சப்படுகிறவர்களுக்குமிடையே
வீரர்களை தொலைத்த குதிரைகள்
நுரைதள்ளிய வாயுடன் விழிகள் திறந்தபடி
மெல்ல மெல்ல மூச்சடங்குகின்றன.//

மிக மிக அருமை
வீரர்களை இழந்த குதிரையென்னும் குறியீடு
பிரமிப்பை ஏற்ப்படுத்திப் போகிறது
ஒவ்வொன்றாய் பொருத்துப் பார்த்து வியந்து போகிறேன்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Marc said...

குதிரையின் வலி பற்றிய கவிதை அருமை

தீபிகா(Theepika) said...

முதலாவதாய் வந்து சரியாய் புரிந்துகொண்ட உங்களின் பார்வைக்கு நன்றி ரமணி அவர்களே.

தீபிகா(Theepika) said...

நன்றி தனசேகரன். உங்களின் வருகைக்கும்...தவறாமல் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களுக்கும்.

கீதமஞ்சரி said...

சுமைகள் சிலருக்குப் பாரம். போர்க்களக்குதிரைகளுக்கோ சுமப்பதற்கு ஆளில்லாமையே பாரம். மனதின் பாரம், விழியோரத்து ஈரம். கடைசிபத்தியில் கனத்துநிற்கிறது கவிதையின் மொத்தப்பாரமும். பாராட்டுகள் தீபிகா.

ஹேமா said...

பெருமூச்சுமட்டுத்தான் தீபிகா !

Suresh Subramanian said...

கடைசிபத்தி அருமை .. அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்.... http://www.rishvan.com

Unknown said...

போர்களத்துக்குதிரைகள் படும் வதை, அதை
பார்க்கச்சகிக்காது நமக்கு. வரிகள் சீழ் வடிக்கின்றன அவற்றின் காயங்களுக்காய்.

அபாரம் தோழி!

யியற்கை said...

miga adarvaana kavithai , intha paaduporulin kalame thigaikka vaikkirathu , ithai yosikkum pothe porkalaththin kurooram pathaikka vaikkirathu
vaazhththukkal

நம்பிக்கைபாண்டியன் said...

குதிரைகளின் கண்ணீரான இரக்க மனமும், அவைகளின் நிலையும் மனம் கலங்கவைக்கின்றன!
உங்களின் சிறந்த பதிவுகளில் ஒன்று இது!

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

Post a Comment