More than a Blog Aggregator

May 27, 2013

கண்களின் பயணம்

கண்களின் பயணம்



ஓடும் முகில்களில் 
உருவங்களை எதிர்பார்க்கும் கண்கள்.
சத்தமின்றி பறந்து போன 
ஜெற் விமானத்தின் புகை நீளத்தை 
தொடர்ந்து செல்லும் கண்கள்.
கடந்து போகிற ரயிலின் பெட்டிகளை
அவசரமாய் கணக்கெடுக்கும் கண்கள்.
நிலவின் கறையில் 
உருவத்தை தேடும் கண்கள்.
வரிசையாய் போகும் 
எறும்புகளின் முடிவிடங்களை
தேடித் தொடர்ந்து செல்லும் கண்கள்.
கவர்ச்சிகளில் 
அவசரமாய் தங்கிப்போகும் கண்கள்.
பேரூந்துகளில்
பிடித்துப் போன ஒருமுகத்தை
பிரியும் வரைக்கும்
விட்டுவிட்டு தொடரும் கண்கள்.

கண்கள் பயணித்துக் கொண்டேயிருக்கின்றன.
என்றும் மாறாத தம் விருப்பப் பாதையில்.
---xxx----


தீபிகா
19-05-2013
06.04 P.m


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைத்தது பயணம்...

தொடர வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகச்சிறந்த படத்தேர்வு. ம்னமார்ந்த ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

கண்களின் பயணம் என்ற தலைப்பும், ஆக்கமும் அருமையோ அருமை.

மிகவும் ரஸித்துப்படித்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...

இது போன்ற அருமையான
விருப்பமான கவிதைகளைத் தொடர்ந்தும்...
வாழ்த்துக்கள்

Post a Comment