More than a Blog Aggregator

May 28, 2013

எப்படி இருக்கிறீர்கள்?

எப்படி இருக்கிறீர்கள்?


புகழ் எனப்படுவது கூட ஒரு வகை போதை தான். நான் கொண்டாடப்பட வேண்டும் என்றும்,நான் மதிக்கப்பட வேண்டும் என்றும் எண்ணும் மன இயல்பு ஒரு வித முற்றிய நோய்க் கூறே. மரியாதை என்பதும் அன்பைப் போலவே கேட்டு பெற முடியாத உணர்வு. நம் ஒழுக்கமும், ஒழுங்குமே அதை பெற்றுத் தரும். நாம் புத்திசாலிகளாகவும், பலசாலிகளாகவும் இருக்கின்றோமா? என்று சுய பரிசீலனை செய்வதற்கு முன்னர் நல்ல பண்பாளர்களாக இருக்கின்றோமா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எல்லோரும் எம்மைப் போன்று இருக்க வேண்டுமென்று ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது சுத்த மடைமைத் தனம்.
பதில் சொல்லுதல் என்பது கூட ஒரு வகை கலையே. ஒரு குழந்தைக்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமென்பதும், ஒரு வெறிகாரனின் கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பதும் ஒரு பக்குவப்பட்ட மனிதனுக்கு தெரிந்திருக்க வேண்டும். நாம் வாழும் சமூகம் என்பது படித்த மானிடர்களால் தான் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது குருட்டுத்தனம் மிக்க தவறான சிந்தனாவாதம். வாசிப்புக் கலை ஒரு மனிதனின் அறிவை உயர்த்தும் என்பது எவ்வளவு உண்மையோ அதை விட ஆயிரம் உண்மையானது நேசிப்புக் கலை தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் என்பது.

தம்மை அறிவாளிகள் என்று சொல்லி கொள்கிறவர்கள் முதலில் பழக்கப்பட்டிருக்க வேண்டியது ஒரு படிக்காத பாமரனை எப்படி கையாளுவது என்பதையே. ஒரு அணு விஞ்ஞானிக்கு கூட படிக்காதவனிடமிருந்து கேட்டுக் கற்றுக் கொள்ள எத்தனையோ அனுபவக் குறிப்புக்கள் இருக்கக் கூடும். சமூகத்தின் பொறுப்பு மிக்க பதவிகளில் தாம் இருப்பதாக உணர்கிற புத்திசாலி மனிதர்களுக்குரிய முதற் தகுதியே ஒரு சமூகத்தில் அங்கம் வகிக்கிற எல்லா வகையான மனிதக் கூறுகளையும் வெற்றிகரமாக கையாளத் தெரிந்திருத்தலே.

தான் வாழும் சமூகத்தை பக்குவமாக வளர்த்தடுத்துச் செல்லத்
தெரியாத எந்தப் பெரிய மேதையும் அவருடைய
ஆற்றல்களாலும், விருதுகளாலும், பதவிகளாலும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. எத்தனை உலகத் தரமான இலக்கியங்களை அவர் கரைத்துக் குடித்திருந்தாலும் தன் சமூகத்தின் மொழியைப் புரிந்து கொள்ள முடியாதவரால்அந்தச் சமூகத்திற்கு எந்தவித பலனும் கிடைக்கப் 
போவதேயில்லை.

ஒரு உண்மையான அறிவாளி என்பவனுக்கும், தன்னை தன் சமூகத்தின் பிரதிநிதி என்பவனுக்கும், உண்மையான பெருமை என்பது "தான் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்றிச் செல்லுதல்" என்பதுவே. அந்த நற்செயலை புரிகிற பெரு மகனை அவன் வாழும் சமூகம் முதல் அகிலமுமே போற்றிப் புகழும்.

அதற்கு அடிப்படைத் தேவை அறிவு அல்ல.
பேரன்பும், நற்பண்பும், சகிப்புத் தன்மையுமே.
---xxx ----


தீபிகா
27-05-2013
10.28 P.m


3 comments:

Seeni said...

unmaithan...

azhakaana sinthanai...!

மாலதி said...

வணக்கம் இது ஒரு வகையில் எனக்காக எழுதப்பட்டவையோ என எண்ணுகிறேன் உண்மையில் சில சமூக கற்பிதங்கள் என்னை அலைகழித்து விடுகிறது எண்ணல் உண்மைகள் உறங்கும் போது என்னால் உறங்க இயலவில்லை இந்த சமூகத்தின் சராசரியை புரிந்து கொண்டு அவனை பின்பற்றுவதோ அல்லது புறந்தள்ளுவதோ மிகவும் சிக்கலான விடயம் கரணம் இங்கு சகிப்புத்தன்மை மிகவும் தேவை எல்லோரிடத்தும் இது கொட்டிக் கிடப்பதில்லை உங்களின் இடுகை எனது உள்ளத்தை சற்று சிந்திக்க வைத்தது என்பது உண்மை ... பாராட்டுகள்

திண்டுக்கல் தனபாலன் said...

/// நேசிப்புக் கலை தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் என்பது... ///

அவரவர் உணர வேண்டிய கருத்துக்கள் பல... பாராட்டுக்கள்...

தொடர வாழ்த்துக்கள்...

Post a Comment