மனதின் பிரியத்துக்குரிய தோழமை
இயற்கையிடமிருந்து விலகியிருக்கிற
ஒரு மனிதனுடைய உடலும், உள்ளமும் ஒருபோதும்
ஆரோக்கியமானவையாக இருக்க முடியாது.
எந்த விளம்பரங்களுமற்று, இயற்கை மனிதனை எப்போதும் நேசித்துக் கொண்டே இருக்கிறது. இயற்கையைப் போல் ஒரு சிறந்த ஆசான் மனிதர்களுக்கு சாத்தியமே இல்லை. மனசின் காயங்களுக்கு இயற்கை இடுகிற களிம்புகளைப் போல எந்த மருத்துவமும் களிம்பிட முடியாது.
அன்பாய் தழுவுகிற பச்சை மரக் காற்றும்,
அமைதியாய் தவழ்கிற ஆற்று நீரின் பயணமும்,
நடக்கையில் கூட வருகிற நிலவின் சினேகமும்,
மாலை வானத்தின் மௌன வரவேற்பும்,
சத்தமின்றி பொழிகிற பனித்துளி அழகும்,
சத்தமோடு பொழிகிற மழையி்ன் சாரல்களும்,
மனித மனசை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
இயற்கை மனிதனிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை. எதையும் எதிர்பார்க்காத தாயின் அன்பு இயற்கையிடமிருந்து தான் தாய்மைக்கு கி்டைத்திருக்க வேண்டும். இயற்கையை நேசிக்கிற குழந்தை எந்த சூழ்நிலைகளிலும் வாழ்க்கையின் பிடிப்பை இழந்து விடாது. இயற்கையை நேசியுங்கள். அங்கு இறைவனை காண்பீர்கள். இயற்கை என்பது இறைவனின் கரங்களால் உருவாக்கப்பட்ட படைப்பு.
---xxx----
தீபிகா.
07-05-2012
11.00 Am.
3 comments:
இயற்கையைப்பற்றி, இயற்கையாகவே, மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள். மிகவும் ரஸித்துப்படித்தேன். பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
இயற்கை-மனதை உற்சாகப்படுத்தும் மந்திரம்...
சொன்ன விதம் அருமை.... தொடர வாழ்த்துக்கள்....
அழகாக கூறியுள்ளீர்கள்... பாராட்டுகள். இயற்கையை நேசிப்போம்...
Post a Comment