More than a Blog Aggregator

Dec 22, 2011

மனசுக்குள் வளரும் ஆலமரம்




ஒற்றைக்கால் கொண்ட
பச்சைக் கம்பளக் கட்டிலாய்
விசாலித்திருக்கிற ஆலமரம்
பெருமைகள் நிறைந்துவழிய
தன் சாதனைச் சொற்களை
என் செவிகளுக்குள் திணித்தது.

தான்
வெயில் வாங்கி நிழல் கொடுப்பதாய்...
வேர்வைத்துளிகளை காய வைப்பதாய்...
மழைக்கு பெருங்குடை பிடிப்பதாய்...
குருவிக் குஞ்சுகளுக்கு பிரசவ விடுதியாயும்...
அணில்பிள்ளைகளுக்கு
விளையாட்டு மைதானமாயும்
இருப்பதாய் விலாசமடித்ததது.

வென்றதும் தோற்றதுமான
பல காதல்கள்
முதன்முதலில் தன் மேனியிலேயே
பதிவு பண்ணிக்கொண்டதாக
தழும்புகள் காட்டியது.

சிறுவர்கள் ஊஞ்சலாட
விழுதுகள் கொடுப்பதாயும்..
பெருசுகளிருந்து புகையிழுத்து விட
வேரடிகளை கொடுப்பதாயும்...
ஆச்சியொருத்தி கச்சான் விற்க
குளி்ர்மையான இடம் கொடுப்பதாயும்
சுய விளம்பரம்செய்தது.

தன் சாதனைகளை
சலசலத்துக் கொண்டிருந்த
ஆலமரத்தின் நிழலுக்கு கீழே
பறவை விழுத்திய எச்சத்துக்குள்ளிருந்து
முளைவிட்டு கருகிக் கொண்டிருந்த விதை
குற்றம் சாட்டியது.

ஆலமரம்
தனக்கு கீழிருக்கும் எதையும்
வளரவிடாது தடுப்பதாய்.


தீபிகா
02.12.2011
1.58 Pm.

15 comments:

Thozhirkalam Channel said...

தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..

வாழ்த்துக்களுடன்

தமிழ்குறிஞ்சி said...

தங்களது கவிதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தங்கள் படைப்புகளை தமிழ்க்குறிஞ்சி அன்புடன் வரவேற்கிறது.

படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : tamilkurinji@gmail.com

இராஜராஜேஸ்வரி said...

மனசுக்குள் வளரும் ஆலமரம் விழுதுவிட்டு விசாலமாய் கவிதை இடம்பிடித்துவிட்டது..

பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆலமரத்தின் நிழல் போன்ற அருமையான குளுமையான கவிதை தான்.

சிறிய அந்த விதை பேசுவதாகச் சொன்னதும், ரஸிக்கக்கூடியதாகவே உள்ளது.

தீபிகா(Theepika) said...

ஆலமரத்தடிக்கு வந்து நிறை-குறை பகிர்ந்த அனைவருக்கும் என் நன்றிகள்.

Admin said...

நல்ல கவிதை வாழ்த்துகள்..


வாக்கு (TM-TT)
அன்போடு அழைக்கிறேன்..

மௌனம் விளக்கிச் சொல்லும்

தீபிகா(Theepika) said...

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மதுமதி.

Anonymous said...

தீபிகா ,
அனைத்தும் அருமையான கவிதைப் பதிவுகள் !
வாழ்க வளர்க தோழியே !

தீபிகா(Theepika) said...

தங்கள் வருகைக்கும்..வாழ்த்துக்களுக்கும்
நன்றி சகோதரி ஸ்ரவாணி.

Yaathoramani.blogspot.com said...

கழிவுகள் இன்றி உற்பத்தி இல்லை
விஷம் இல்லாது அமுதெடுப்பதென்பது
தேவர்களாலும் முடியாது
அருமையான படைப்பு.வாழ்த்துக்கள்

தீபிகா(Theepika) said...

தங்கள் உற்சாகமூட்டும் கருத்துக்கு இனிய நன்றிகள்.

vimalanperali said...

இப்படி எல்லாமுமய் இருக்கிற ஆலமரங்களும் சரி, மற்றவைகளும் சரி சமீபமாய் வெட்டப்படுகிறபோது எழுகிற சோகம் சொல்லி மாளாதது.

தீபிகா(Theepika) said...

பூமியின் வரங்கள் மரங்கள் -அதை
வெட்டிடும் கரங்களின் மனசில்
என்றுமே இல்லை அறங்கள்.
உங்கள் சோகத்தை நானும் உணர்கிறேன் விமலன்.நன்றி.

Marc said...

அட ஆலமரத்தை வச்சு அழகான கவிதை சொல்லி இருக்கும் விதம் அருமை.

தீபிகா(Theepika) said...

வருகைக்கும்- உங்கள் வார்த்தைகளுக்கும் நன்றி தனசேகரன்.

Post a Comment