More than a Blog Aggregator

Feb 20, 2012

பல்லிவாலும்-பயங்கரவாதிகளும்

பல்லிவாலும்-பயங்கரவாதிகளும்




அசைபட்ட கதவிடுக்கில்
அகப்பட்டு அறுந்து விழுந்து
துடிதுடித்துக் கொண்டிருந்த
பல்லி வாலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த
என் பதினாறு வயது மகனை
பயங்கரவாதியென சொல்லிக் கொண்டு
கூட்டிப் போயின.
பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த
பயங்கர முகங்கள்.


இன்னும் 
வீடு திரும்பவேயில்லை
எனது மகன்.


எப்படியும் திரும்பி வந்துவிடுவானென 
நினைக்கிற ஒவ்வொரு தடவையும்
உடனே தவறாமல் 

சொல்லிக் கொண்டேயிருக்கிறது
சுவரிலிருந்தபடி
அந்த வாலறுந்த பல்லி.




---xxx----




தீபிகா. 
10.59 P.m 
22-01-2012.














13 comments:

Marc said...

அருமைக்கவிதை வாழ்த்துகள்

Anonymous said...

ஆழ்ந்த நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை .

மகேந்திரன் said...

பல்லியின் வாலறுக்கும் தன்மை
அதன் சுய நிலைப்புத்தன்மைக்கு
உருவாக்கப்பட்டது.
அதை அருமையாக கவிதைக் கருவாக
எடுத்துக்கொண்டாமை அழகு..
வாழ்த்துக்கள் சகோதரி.

Yaathoramani.blogspot.com said...

அசைபட்ட கதவிடுக்கில்
அகப்பட்டு அறுந்து விழுந்து
துடிதுடித்துக் கொண்டிருந்த
பல்லி வாலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த
என் பதினாறு வயது மகனை
பயங்கரவாதியென சொல்லிக் கொண்டு
கூட்டிப் போயின.
பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த
பயங்கர முகங்கள்.

அருமையான உவமை
பல்லியின் ஒரு வால் இழப்பினைக்கூட
தாங்கிக் கொள்ளும் இளகிய மனம் படைத்தவன்
வயதின் காரணமாகவே தீவீர வாதியாக இருப்பான்
சித்தரித்துக் கொள்ளும் அவலம்
வேறு எங்கு நிகழக் கூடும்
அந்த கொடூர நாட்டைத் தவிர
மனம் கனக்கச் செய்து போகும் பதிவு

துவாரகன் said...

"அசைபட்ட கதவிடுக்கில்
அகப்பட்டு அறுந்து விழுந்து
துடிதுடித்துக் கொண்டிருந்த
பல்லி வாலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த
என் பதினாறு வயது மகனை"

நல்ல படிமம். வாழ்த்துக்கள்

albert said...

very fine.

தீபிகா(Theepika) said...

பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் DhanaSekaran.s ஸ்ரவாணி,மகேந்திரன்,Ramani துவாரகன்,albert அனைவருக்கும் நன்றிகள்.

Unknown said...

பல்லி சொல்வது நல்ல பலனாயிருக்கட்டும்!
தாய்மை, நெகிழ வைக்கிறது வரிகளில்.
வாழ்த்துகள்!

உங்கள் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளை
எங்கள் "வெயில் நதி" இதழுக்கு அனுப்பி, இதழ் சிறக்கச்செய்ய அன்போடு வேண்டுகிறேன்.

வெயில் நதி இதழ் குறித்த விபரங்களுக்கு என்
வலைப்பூவிற்கு அன்போடு அழைக்கிறேன்

நட்புடன்
ப.தியாகு,
கோவை, தமிழ்நாடு

Suresh Subramanian said...

very nice ....www.rishvan.com

தீபிகா(Theepika) said...

ப.தியாகு மற்றும் றிஸ்வன் ஆகியோரின் வருகைக்கும்...அனைவரின் வலியுணர்ந்த மனசுகளுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிய சம்பத்குமாரின் ஆதரவு எண்ணத்துக்கும் மனம்
நிறைந்த நன்றிகள்.

SELECTED ME said...

அன்புள்ள தோழமைக்கு, உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்! http://www.nilapennukku.com/2012/02/blog-post_26.html

ஹேமா said...

மனதை நெகிழவைக்கிறது வரிகள்.இப்படி எத்தனை பல்லிகளும்.அம்மா மகள்களும்.இன்னும் தொடர்ந்தபடிதானே தோழி !

விச்சு said...

வாலறுந்த பல்லி அம்மாவின் அன்பினை நினைவூட்டுகின்றன.

Post a Comment