More than a Blog Aggregator

Jun 1, 2013

மிச்சமிருக்கும் பயணம்

மிச்சமிருக்கும் பயணம்


செத்துப் பிழைக்கும் 
ஒரு உச்சி வெயில் 
பேரூந்துப் பயணத்தின் முடிவில் ... ....

மூச்சுத் திணறலில் இருந்து விடுபட்டு வந்த
அனுபவம் மிச்சமிருக்கும். 
நெருக்கித் திருகிய உடம்புகளதும்,
விளக்கி உழக்கிய கால்களதும்
அடையாளங்களும் வலியும் மிச்சம் இருக்கும்.
சூரியக் கோபங்களில்
தங்களுக்குள் சிந்திக் கொண்ட
சனங்களின் அகோர வசைமொழிகள் 
மிச்சமிருக்கும் 
குளறிய குழந்தைகளது 
அழுகையொலிகள் மிச்சமிருக்கும்.
சில்லறைக்கு சினந்த 
நடத்துனரின் கோபம் மி்ச்சமிருக்கும்.
இடைவெளிகளுக்குள்ளால் 
மறைந்து மறைந்து சந்தித்த 
ஒரு சோடி எதிர்ப்பால் பார்வைகள் மிச்சமிருக்கும்.
யாரோ செல்பேசியில் சத்தமாய் கதைத்த
ஒரு குடும்பத்தின் 
நாட்குறிப்பொன்றும் மிச்சமாய் இருக்கும்.
கசங்கிப் போன சட்டையும்
வழிந்து ஒழுகும் வியர்வையும் மிச்சமிருக்கும்.
குமட்டிக் கொண்டு வருகிற
செத்த எலியின் நாத்தம் மிச்சமிருக்கும்.
துப்பாது வைத்திருந்த 
எச்சில்துளி மிச்சமிருக்கும்.


----xxx------

தீபிகா
22-05-13
05.28 P.m

6 comments:

Seeni said...

ada...

unmaithaan ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிச்சம் மீதி ஏதும் இல்லாமல் இப்படி ’மிச்சமிருக்கும்’ என்று ஒரேயடியாக எழுதி அசத்தி விட்டீர்களே! ;)))))

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்... சொல்லிட்டேன்... அதை ஏன் மிச்சம் வைப்பானேன்... ஹிஹி...

Yaathoramani.blogspot.com said...

அனைவரும் அனுபவிக்கும் அவஸ்த்தையைக் கூட
கவிதையாக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பேருந்தில் பயணிக்கும் அனைவரின் அனுபவங்கள....

கவிதையில் இன்னொரு அனுபவமாய்...

ஆத்மா said...

ஐயோ...
பஸ் பயணத்தில் படும் அவஸ்த்தையை வெளிப்படுத்திய விதம் அருமை
வாழ்த்துக்கள்

Post a Comment