குடியிரவு
இரவைக் கிழித்துக் கொண்டொலிக்கும்
குடிகாரனின் தத்துவப் பாடலில்
கரைந்து கசிகிறது
ஒரு குடும்பத்தின் கண்ணீர்.
வெட்கமும்,அவமானமும் தின்ற
அவனது
வளர்ந்த பெண்பிள்ளைகளின் முகங்கள்
கண்ணீர் குடித்து வீங்கியிருக்கின்றன.
காலைச் சத்தியங்களை
உடைத்தெறிந்து கொண்டு
மீண்டும் மரமேறும்
குடிகாரனின் வேதாளம்
ஒரு மாலைத் தேனீரைப் போல
குடியைக் குடித்துக் கொண்டு ஆடுகிறது.
பெண்களின் தலை முடியிழுத்து
சண்டையிடப் போகும்
குடிகார வீரனுக்காக
காத்திருக்கிறது அவனது வீடு.
பிறப்புறுப்புக்களால் நிறையப் போகும்
அவனது வசைச் சொற்களை
ஒளிந்திருந்து கேட்கத் தயாராகிறது
ஊரின் செவிகள்.
வீதியோரமாய் வளர்ந்து நின்று
எல்லாவற்றையும் பார்த்து புன்னகைக்கிறார்.
குடிமக்களின் மேல் அக்கறையுள்ள
மாண்புமிகு தலைவர்.
---xxx---
தீபிகா
08.09.2013
07.38 Pm.
08.09.2013
07.38 Pm.
6 comments:
வேதனை மிக்க வரிகள். சிந்திக்க வைக்கும் ஆக்கம்.
கொடுமை என்று தீரும்...?
குடியின் கொடுமைகளை உணர்ந்தும் மீண்டும் மீண்டும் அதன் பிடியிலே சிக்கிக் கொள்பவர்களை என்னவென்பது. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?
என் செய்வதோ ?
என் சொல்வதோ ?
சென்ற வாரத்தில் எனது ரசனையின் டாப் வரிசையில் இடம் பிடித்த இந்தக்கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
http://jeevanathigal.blogspot.com/2013/09/02-to-08-09-2013.html
realy dutching
Post a Comment