வண்ணத்துப்பூச்சியும் மகனும்
அப்போது
நான் தோட்ட வெளியெங்கும்
துரத்தித் திரிந்து பிடித்த
அதே நிற வண்ணத்துப் பூச்சியை
இப்போது
மகன் துரத்துகின்றான்.
என்னைப் போல்
அவனுக்கு
வெளியில்லை.
வேர்வையில்லை.
காற்று இல்லை.
இறுதியில்
அவன் பிடிக்கப் போவதுமில்லை.
இந்தத்
தொலைக் காட்சித் திரையில்.
---xxx----
தீபிகா
2.33 Pm.
27.01.2015
நான் தோட்ட வெளியெங்கும்
துரத்தித் திரிந்து பிடித்த
அதே நிற வண்ணத்துப் பூச்சியை
இப்போது
மகன் துரத்துகின்றான்.
என்னைப் போல்
அவனுக்கு
வெளியில்லை.
வேர்வையில்லை.
காற்று இல்லை.
இறுதியில்
அவன் பிடிக்கப் போவதுமில்லை.
இந்தத்
தொலைக் காட்சித் திரையில்.
---xxx----
தீபிகா
2.33 Pm.
27.01.2015
2 comments:
கான்க்ரீட் காடுகளில் வண்ணத்துப்பூச்சிகளைக் காணமுடியவில்லை
வணக்கம்! தங்கள் தளத்திற்கு புதியவன்!! அருமையான கவிதை வாழ்த்துகள் நன்றி!!
அன்புடன் கரூர்பூபகீதன்!!!
Post a Comment