பிரச்சாரகி
தன்னிடம் கொடுக்கப்பட்டிருக்கும்
கவர்ச்சி வார்த்தைகளை
வெயிலின் சுமை தாங்கிய படி
கால்கடுக்க நின்று கொண்டு
அந்தப் பெண் எல்லோருக்கும்
இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறாள்.
உதாசீனப்படுத்திக் கொண்டும்
புறக்கணித்துக் கொண்டும்
சிலவேளைகளில்
வசவுகளை வழங்கிக் கொண்டும்
கடந்து போகிற எல்லா முகங்களிடமும்
மனனம் செய்து வைத்திருக்கிற
அந்த இரவல் சொற்களை
அவளுடைய குரல் எந்த உணர்ச்சிகளுமற்று
சலிக்காமல் இறைத்துக் கொண்டேயிருக்கிறது.
அவளுக்குச் சொந்தமில்லாத
அந்த வார்த்தைகளின் சத்தியத்தன்மை பற்றி
அவளுக்கு எதுவுமே தெரியாது.
அளவுக்கு மிஞ்சிய ஒப்பனைகளோடு
வீதியில் இறக்கிவிடப்பட்டிருக்கும்
பரப்புரை வாக்கியங்களுக்கான
அந்த ஆடம்பரப் பொருட்களை
அவளுடைய கைகள்
ஒருபோதும் தடவிப் பார்த்ததுகூட இல்லை.
அவளுக்கு மிக நன்றாகவே தெரியும்.
நாக்கு வரள தான் உச்சரித்துக் கொண்டிருக்கும்
அந்த வார்த்தைகள் தான்
தன்னுடையதும்...
தன்னுடைய குழந்தையினதும்...
வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கின்றன
என்ற உண்மை மட்டும்.
---xxx----
தீபிகா
09-07-2013
10.04 Am
9 comments:
உண்மை மனதை வருத்தச் செய்தது...
vethanai...
பெண் என்னும் அடையாளமே இங்கு பிரதானமாய். போகட்டும் அவளையும் அவளை நம்பியிருக்கும் சிறு ஜீவனையும் காப்பாற்ற உதவுகிறதே அந்த அடையாளம்.
மனந்தொட்ட கருவும் கவியும். நன்று தீபிகா.
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் கவி படைக்கும் வல்லமை மேலும் ஓங்குக ......
வணக்கம் !
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம்
செய்துள்ளேன் .முடிந்தால் அவசியம் வாருங்கள் இங்கே
http://blogintamil.blogspot.ch/2013/07/3_25.html
Visit : http://blogintamil.blogspot.in/2013/07/3_25.html
வாழ்த்துக்கள்...
வணக்கம்
மனதை உருக்கிய வரிகள் அருமை வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/07/3_25.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்க்கையைச் சிலசமயம் வெறுத்தாலும் வாழ்வேண்டித்தானிருக்கிறது.வாழ்வோம் !
அனைவருக்கும் அன்பு நன்றிகள்.
Post a Comment